திருப்பரங்குன்றத்தில் திமுக வெற்றி பெற்று திருப்புனையை ஏற்படுத்தும்: மூர்த்தி எம்எல்ஏ பேச்சு

மதுரை, செப். 7:  மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் விரகனூர், சிலைமான், புளியங்குளம்  கிராமங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் ஊராட்சி கிராம செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். இந்த கூட்டங்களில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. பேசியதாவது: தமிழக ஆட்சியின் அலங்கோலங்களை மக்கள் பார்த்து கோபத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை கூட நடத்த முடியவில்லை. ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Advertising
Advertising

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத் தேர்தல் வருமா? பாராளுமன்ற தேர்தலோடு நடக்குமா? அல்லது சட்டமன்ற தேர்தலும் சேர்த்து வருமா? என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றால் முன்கூட்டியே பணிகளை செய்து ஆயத்தமாக இருக்க வேண்டும். இந்த தொகுதியில் அதிமுகவும், அமமுகவும் ஆர்கே.நகர் போல் நினைத்து கோடி, கோடியாக பணத்தை கொட்ட வியூகம் வகுக்கிறார்கள். அதனை முறியடித்து திமுக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் முடிவு திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும். இவ்வாறு பேசினார். இக்கூட்டங்களில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, மாவட்ட துணைச்செயலாளர் முருகன், பொருளாளர் ஞானசேகரன், சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: