விருது பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு

மதுரை, செப். 7: மதுரை நாகனாகுளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மகாலட்சுமி என்ற மாணவிக்கு 2018ம் ஆண்டின் புரட்சியாளர் விருது, கடந்த 1ம் தேதி சென்னையின் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பரிசு, மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பரிசு உள்பட பலவற்றில் பரிசு பெற்றதற்காக புரட்சியாளர் விருது மாணவி மகாலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் அதிராம்சுப்பு தலைமை வகித்தார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: