ஆந்திரா செல்லும் ரயில்களில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

அரக்கோணம், செப்.7: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருப்பதிக்கும், புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்களில் அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் குமார் தலைமையில் ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக அதிரடியாக சோதனை நடத்தினர்.அப்போது ரயிலில் சீட்டிற்கு அடியில் ஆங்காங்கே ரேஷன் அரிசி மூட்டைகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை அரக்கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர்.

Advertising
Advertising

Related Stories: