3.5 லட்சம் குட்கா பறிமுதல்

சென்னை: குட்கா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடுக்கு குட்கா கடத்தப்படுவதாக கோயம்பேடு பஸ் நிலைய (சிஎம்பிடி) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   அதன்பேரில் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது,  சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு வேன்கள் மறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, குட்கா, பான் மசாலா கொண்ட 7 மூட்டைகள் இருந்தது. இதையடுத்து, குட்கா கடத்தி வந்த சவுகார் பேட்டையை   சேர்ந்த ஜலாம் சிங் (28), நாரயண் சிங் (29), ரிவாத் சிங் (29) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹3.50 லட்சம் குட்கா  மற்றும் இரண்டு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: