6 உறுப்பினர்கள் நீக்கம் சுப்ரீம் கோர்ட் உறுதி தொழில் வர்த்தக சங்கம் அறிக்கை

மதுரை, செப். 6: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் ரத்னவேல், தலைவர் ஜெகதீசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளை அவதூறு செய்த காரணத்தால் பெரீஸ் மகேந்திரவேல், எஸ்.பி.பிரகாசம், ஏ.ஆர்.அற்புதம், எஸ்.பி. அண்ணாமலை, ஆர்.சாந்தமூர்த்தி மற்றும் ஆர்.பி. பாலகிருஷ்ணன் ஆகிய 6 பேரும் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் தேதி சங்க செயற்குழுவில் எடுத்த தீர்மானத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertising
Advertising

இந்த வழக்கில் கூறப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் விசாரித்தனர். முடிவில் உறுப்பினர்கள் நீக்கம் செய்யப்பட்டதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. இதனால் வர்த்தக சங்கம் தொடர்பாக அவர்களுடன் யாராவது தொடர்பு கொண்டால், அது தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: