இன்று நடக்கிறது சூரியன் எஃப் எம்மின் `ஆல் ரவுண்டர்’ மாணவிகளுக்கான வினாடி வினா

மதுரை, செப்.6: சூரியன் எஃப் எம்மின் `ஆல் ரவுண்டர்’ உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவியருக்கான விநாடி வினா இன்று (செப். 6) நடைபெறுகிறது. மதுரை மக்கள் மனதில் முதலிடம் பிடித்துள்ள சூரியன் பண்பலை தன் நேயர்களுக்காக பல சுவராஸ்யமான நிகழ்ச்சிகளையும், இனிய பாடல்களையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் பல்வேறு போட்டிகளையும், நிகழ்ச்சிகளையும் மக்களைத் தேடிச் சென்று நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவியரின் பொது அறிவுத்திறனைச் சோதித்து மேம்படுத்தும் விதமாக `ஆல் ரவுண்டர்’ என்ற வினாடி வினா போட்டியை இன்று மகாத்மா சிபிஎஸ்சி பள்ளியில் நடத்துகிறது. இது முழுக்க முழுக்க மாணவியருக்கான அறிவுத் திறன் போட்டியாகும்.

Advertising
Advertising

இதில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவியர் சீனியர் பிரிவிலும், 11 மற்றும் 12ம் மாணவியர் சூப்பர் சீனியர் பிரிவிலும் கலந்து கொள்ளலாம். இரு பிரிவிலும் அணிக்கு இருவர் கொண்ட மூன்று குழுவினர் ஒரு பள்ளியிலிருந்து கலந்து கொள்ளலாம். போட்டியினை மதுரை வினாடி வினா சங்கத்தின் நிர்வாகி சுந்தரநாதன் நடத்துகிறார். போட்டியில் கலந்து கொள்ளும் குழுக்களுக்கான தகுதிச் சுற்றுக்குப் பிறகு தேர்தெடுக்கப்பட்ட குழுக்கள் அரையிறுதிப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். அதில் வெற்றி பெறும் மூன்று குழுக்கள் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வர். போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். வெற்றி பெறும் அணிக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாணவியர் இன்று காலை 9.30 மணிக்குள் அரங்கில் இருக்க வேண்டும். சீருடையும், அடையாள அட்டையும் அணிந்து வருதல் வேண்டும். மேலும் தகவல்களுக்கு 9159935935 என்ற சூரியன் எஃப் எம்மின் அலுவலக எண்ணில் அழைக்கலாம். இதுவரை முன்பதிவு செய்யாத குழுக்களும் நேரடியாக அரங்கிற்கு வந்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். சூரியன் எஃப் எம்மின் இந்த ஆல் ரவுண்டர் பெண்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சியை உருகவைக்கும் சுவையுடைய ஏஏசி நெய் நிறுவனத்தார் நடத்துக்கின்றனர். அறிவுத் தோழமையுடன் பண்டா பேக்ட்ரியும், ஊடகத்தோழமையுடன் தினகரன் நாளிதழும் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

Related Stories: