வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

மதுரை, செப்.6: சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முருகேசன் மற்றும் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். பாஜக மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், மாநகர் மாவட்டத்தலைவர் சசிராமன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

Advertising
Advertising

அமமுக மாநில கொள்கை பரப்புச்செயலாளர் தங்கதமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் விஜயராஜன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நந்தாசிங் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். தென்னிந்திய வெள்ளாளர் சங்கத்தலைவர் செல்வராஜ், ஐஎம்பிஏ அமைப்பு சார்பில் திருமுருகன் தலைமையில் நிர்வாகிகள் ராமச்சந்திரகுமார், தனவேலன் உள்ளிட்டோர் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சமக சார்பில் புறா மோகன், ஜனதா தளம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் ஜான்மோசஸ், பார்வர்டு பிளாக் (வல்லரசு அணி) சார்பில் அமாவாசை மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மரியாதை செலுத்தினர்.

Related Stories: