வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, செப். 6: வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுைவத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 23 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டச் செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். மாநகர துணைத்தலைவர் இப்ராஹீம் சேட் முன்னிலை வகித்தார். சங்க மாநில செயலாளர் முருகையன் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். மத்திய செயற்குழு உறுப்பினர் கோபி, மாவட்ட பொருளாளர் முகைதீன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மத்திய செயற்குழு உறுப்பினர் மணிமேகலை நன்றி கூறினார்.

Related Stories: