இளம் பெண்ணிடம் செல்போன் ₹10 ஆயிரம் பறிப்பு

ஆம்பூர் செப்.6: ஆம்பூர் அருகே சைக்கிளில் சென்ற இளம் பெண்ணிடம் செல்போன் மற்றும் ₹10 ஆயிரத்தை நபர்கள் பறித்து சென்றனர்.ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அப்பகுதியில் பாஜ கிளை செயலாளராக உள்ளார். இவரது மகள் நிரோஷா(27). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். 3ம் தேதி மாலை நிரேஷா வேலை முடிந்து பஸ்சில் ஊர் திரும்பினார். பஸ் ஸ்டாப்பில் இருந்து தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

புதுமனை அருகே வந்த போது அவ்வழியாக வந்த ஒரு மர்ம நபர் நிரேஷாவின் கையில் இருந்த பையை திடீரென பறித்துக்கொண்டு தப்பியோடினார். அந்த பையில் நிரோஷா செல்போன் மற்றும் ₹10 ஆயிரம் வைத்து இருந்தாராம். இதுகுறித்து புகாரின் பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: