×

இலந்தை கூடம் கிராமத்தில் புதர் மண்டிக்கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தல்

அரியலூர்,செப்,5: அரியலூர் மாவட்டம் இலந்தை கூடம் கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் புதர் மண்டி பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் கிராம பெண்கள் இயற்கை உபாதைகளுக்காக அவதியுறும் நிலை உள்ள ஊராக திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட இலந்தைக்கூடம் கிராமம் திகழ்கிறது. இக்கழிப்பறையில் கருவேலி மரம் முளைத்து  அதில் விஷ ஜந்து உள்ளதால் பெண்கள் கழிவறை பக்கம் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்த பொது சுகாதார வளாகம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்த சுகாதார வளாகம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடிக்கப்பட்டு புதிதாக சுகாதார வளாகம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் கிராமத்து பெண்களை சாலையோரம் மலம் கழிக்க விட்டு விட்டு தூய்மையான கிராமம் பொது வெளியில் யாரும் மலம் கழிப்பது கிடையாது என தகவல் பலகை வைத்திருப்பது வேதனையளிக்கிறது. கிராம மக்கள் பொது கழிப்பறையை சுத்தம் செய்து கருவைகளை அகற்றி புதுபித்து தர வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட துறையினரை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென  இலந்தைக்கூடம் கிராம பெண்கள் கோரிக்கை வைத்துள்னர்.



Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...