×

டி.கொத்தனூர் பெருமாள் கோயிலில் 101ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம்

தேன்கனிக்கோட்டை, ஆக.15:  தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனூர் பெருமாள் கோயிலில் 101ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை அருகே டி.கொத்தனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 101ம் திருக்கல்யாண உற்சவம் மற்றும் மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மஹா கணபதி ஆராதனை, அஸ்ட திக்பாலக்க ஆராதனை, பரிவார தேவதாரனை, யாக மண்டப பிரவேசம், நவகிரஹ ஹோமம், பூர்ணாஹூதி நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி-தேவி, பூதேவி கல்யாண திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். விழாவில் டி.கொத்தனூர் மற்றும் கலகோபசந்திரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்தா கமலம்மா குடும்பத்தார் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்