×

அரியலூர் தாலுகாவில் காவிரி நீர் வரத்தின் காரணமாக கண்டிராதித்தம் ஏரி நிரம்பியது

அரியலூர், ஆக. 15: அரியலூர் தாலுகாவில் உள்ள கண்டிராதித்தம் ஏரி காவிரி நீர் வரத்தின் காரணமாக நிரம்பியது. இதுகுறித்து கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அரியலூர் தாலுகா, கண்டிராதித்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஏரி நந்தியார் பிரதான வாய்க்காலின் கடைமடை பகுதியாக உள்ளது. கண்டிராதித்தம் ஏரியின் மூலம் இப்பகுதியில் விவசாயிகளுக்கு சொந்தமான 102.61 ஹெக்டேர் நிலத்தில் காவிரி நீரை பய்ன்படுத்தி விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாயிகளுக்கு கண்டிராதித்தம் ஏரியிலிருந்து மதகுகளின் மூலம் திருமழபாடி வாய்க்கால், விஸ்வத்தமன் வாய்க்கால், அய்யன் வாய்க்கால், அப்பலக்குறிச்சி மேட்டு வாய்க்கால், அப்பலக்குறிச்சி பள்ள வாய்க்கால், இலந்தைக்கூடம் வாய்க்கால் மற்றும் நந்தியார் நீட்டிப்பு வாய்க்கால் ஆகியவற்றில் பாசன நீர் பிரித்து வழங்கப்படுகிறது. இதற்கிடையே கொள்ளிடத்தில் செல்லும் காவிரி உபரி நீரை நந்தியாறு தலைமதகுகளின் வழியாக எடுத்து, நந்தியாறு பிரதான வாய்கால் மூலம் கண்டிராதித்தம் ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால், கண்டிராதித்தம் ஏரி தற்பொழுது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது