×

மூமுக பிரமுகர் கொலை வழக்கு கும்பகோணம் கோர்ட்டில் ரவுடி உட்பட 13 பேர் ஆஜர்

கும்பகோணம், ஆக. 15: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தை சேர்ந்த மூவேந்தர் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் லட்சுமணன். இவர் 2012ம் ஆண்டு 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து கமலக்கண்ணன், ஜீவா, ஆனந்த், மூர்த்தி உட்பட 12 பேரை கைது செய்தனர். மேலும் மயிலாடுதுறையை சேர்ந்த கபிரியேல் என்பவர் சிறையில் இருந்தவாறு செல்போன் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொலைக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து லட்சுமணன் கொலை வழக்கில் கபிரியேலை சேர்த்து  குற்ற பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை, கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதற்காக சென்னை புழல் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்போடு கும்பகோணம் கோர்ட்டுக்கு கபிரியேல் அழைத்து வரப்பட்டார். வழக்கு விசாரணையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் ஆஜராகினர். இதையடுத்து  வழக்கை விசாரித்து வரும் 28 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...