×

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தீவிரம் மகாதேவபுரம் பழைய வாய்க்காலில் வந்த தண்ணீர் வயல்களில் பாய்கிறது

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 15: தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பாதிரகுடி ஊராட்சி வெண்ணாற்றின் வடக்கு கரையில் மகாதேவபுரம் வாய்க்கால் செல்கிறது. இதன்மூலம் 250 ஏக்கர் பாசனம் பெற்று வந்தது. ஆற்றின் கிழக்கு பகுதியில் புதிதாக வாய்க்கால் அமைக்கப்பட்டது. இதனால் வெண்ணாற்றில் திறக்கப்படும் தண்ணீர் மகாதேவபுரம் பழைய வாய்க்காலுக்கு வருவதில்லை. தற்போது கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் 9,526 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

இதனால் பாதிரகுடியில் உள்ள மகாதேவபுரம் (பழைய) வாய்க்காலிலும் தண்ணீர் சென்றது. இந்த தண்ணீர் வாய்க்காலில் செல்லும் தண்ணீர், 50 ஏக்கர் தரிசு வயல்களில் பாய்ந்து வருகிறது. இதனால் தரிசு வயல்கள் மூழ்கி வருவதுடன் ஆதிதிராவிடர் தெருவுக்குள் தண்ணீர் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பூதலூர் தாசில்தார் இளங்கோ சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...