×

நாகம்மாள் கோயில் விழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மேலூர், ஆக. 15: மேலூர் திருவாதவூர் ரோட்டில் அமைந்துள்ள நாகம்மாள் கோயில் திருவிழாவிற்காக 15 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் விரதம் இருக்க துவங்கினர். நேற்று காலை மண் கட்டி தெப்பக்குளம் அருகில் சிறப்பு பூஜைகள் செய்த பெண்கள் அங்கிருந்து பால் குடம் ஏந்தி மேலூரின் பெரியகடை வீதி, திருச்சி ரோடு, செக்கடி வழியாக கோயிலை சென்றடைந்தனர். தொடர்ந்து ஆண்கள் 5 அடி முதல் 30 அடி நீளம் வரை அலகு குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். ஒரே அலகை 2 மற்றும் 3 பக்தர்கள் சேர்ந்து குத்தி ஊர்வலமாக சென்றனர். இத்துடன் பெண் பக்தர்கள் மட்டுமல்லாது திருநங்கைகளும் அலகு குத்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் இன்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. சோக வரலாறு கடந்த 2014ம் ஆண்டு மட்டுமே விளையாட்டு விடுதிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில் மதுரை விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடந்த 2015யில் தோல்வியை சந்தித்துள்ளது. 2016ம் ஆண்டு 7வது இடத்தையும், 2017ம் ஆண்டில் 5வது இடத்தையும் பெற்று படுதோல்வியை சந்தித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...