×

நாகர்கோவில் வழியாக செல்லும் 7 ரயில்கள் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவில், ஆக.15: நாகர்கோவில் வழியாக செல்லும் 7 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே புதிய கால அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் ரயில் எண்: 16532 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்எம்டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் 60 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் : 16351 மும்பை சிஎஸ்எம்டி -நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் 45 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.ரயில் எண்: 16340 நாகர்கோவில் - மும்பை சிஎஸ்எம்டி வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படுகின்ற ரயில் வேகம் 30 நிமிடங்களும், ரயில் எண்: 12642 நிஜாமுதீன்- கன்னியாகுமரி வாரம் இருமுறை ரயில் 25 நிமிடங்களும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் எண்: 12667 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வாராந்திர ரயில் 15 நிமிடங்களும், ரயில் எண்: 16354 நாகர்கோவில் - கட்சிகுடா வாராந்திர ரயில் 15 நிமிடங்களும், ரயில் எண்: 12666 கன்னியாகுமரி - ஹவுரா வாராந்திரா ரயில் 10 நிமிடங்களும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 16724 கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.05 மணிக்கு சென்னை செல்வதற்கு பதில் 8.10க்கு சென்னை சென்றடையும். இதனை போன்று 16128 குருவாயூர்- சென்னை ரயில் சென்னை எழும்பூருக்கு காலை 8.30 மணிக்கு வருவதற்கு பதில் 8.45 மணிக்கு வந்து சேரும். 12642 நிஜாமுதீன்-கன்னியாகுமரி ரயில் சென்னையில் இருந்து 6.20க்கு புறப்படுவதற்கு பதில் 6.25க்கு புறப்படும். இவ்வாறு புதிய ரயில்வே கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு