×

செப்.30ம் தேதி கடைசி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும்

காரைக்கால், ஆக.14: தேமுதிக தலைவர் விஜய்காந்த் பிறந்த நாளை, வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும். என, புதுச்சேரி மாநில செயலாளர் வேலு அறிவுறுத்தியுள்ளார்.காரைக்கால் மாவட்ட தேமுதிமுக முக்கிய பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் காரைக்கால் தனியார் மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, தொகுதி செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுச்சேரி மாநில தேமுதிக செயலாளர் வேலு பேசியது: வருகின்ற 25ம் தேதி தேமுதிமுக தலைவர் விஜய்காந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாட வேண்டும். குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், அன்னதானம் போன்ற உதவிகளை செய்ய வேண்டும். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கு திரளான கழக தொண்டர்களை பங்கேற்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...