×

6 மாதத்திற்கு மேலாக இருளில் மூழ்கி கிடக்கும் அம்மானிப்பட்டு கிராமம்

கறம்பக்குடி, ஆக.14: கடந்த 6 மாதத்திற்கு மேலாக இருளில் மூழ்கி கிடக்கும் அம்மானிப்பட்டு கிராமத்திற்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிலாவிடுதி ஊராட்சி. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பிலாவிடுதி, செவ்வாய்ப்பட்டி, பட்டமாவிடுதி, வெள்ளாளகொள்ளை, மானியவயல், அம்மானிப்பட்டு போன்ற கிராமங்கள் இவ்வூராட்சியில் அமைந்துள்ளன.  இதில் அம்மானிப்பட்டு கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக தெருமின் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் வெளியூர் சென்று திரும்பி வரும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பெண்கள் பெரிதும் சிரமத்திற்கு  உள்ளாகின்றனர். கடந்த 6 மாதமாகவே இந்த அவல நிலை தொடர்வதால் இரவு நேரங்களில் வெளியே செல்வதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர்.

சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன்கருதி அனைத்து மின் கம்ப விளக்குளை எரிய செய்து, இருளில் மூழ்கியுள்ள அம்மானிப்பட்டு கிராமத்திற்கு வெளிச்சம்தர வேண்டும் என கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மகிமை நாயகி முத்து மாரியம்மன் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை வடக்கு 3ம் வீதியில் புதுக்கோட்டை திருக்கோவில்களை சேர்ந்த மகிமைநாயகி முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை கோ பூஜை நடைபெற்றது. பின்னர் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மகிமைநாயகி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...