×

கறம்பக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு

கறம்பக்குடி, ஆக14: கறம்பக்குடி நிலவள வங்கி தலைவர் பதவிக்கு   கறம்பக்குடி அதிமுக ஒன்றிய  செயலாளர் சரவணகுமார்,துணை தலைவர் பதவிக்கு பழனிவேலும் அதேபோல் கறம்பக்குடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் குலந்திரான்பட்டு ராஜா ,  துணை தலைவர் பதவிக்கு அதிமுக நகர செயலாளர் எம்ஜிஆர் அப்துல்லாவும் , முள்ளங்குறிச்சி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் பதவிக்கு கரு கீழத்தெரு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் , துணை தலைவர் பதவிக்கு மாணிக்கம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மூன்று இடங்களிலும் நடைபெற்ற வேட்புமனு தாக்கலை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர்/  தலைவர் , துணை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 6 பேரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...