×

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீட்டு முகாம்

பொன்னமராவதி,ஆக14: பொன்னமராவதியில் உள்ள பொன்.புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவமதிப்பீடு முகாம் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின்கீழ் மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் 17ம் தேதி  பொன்.புதுப்பட்டி அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற உள்ளது. முகாமில் ஒவ்வொரு சிறப்புப்பிரிவிற்கும் மருத்துவர்குழு மூலமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது. மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் தலைமையில் ஒருகுழு ஆய்வு செய்து தேசியஅடையாளஅட்டை இல்லாத குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை பெற்று வழங்கப்படவும்,

தகுதி உடைய குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கும்  இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஆதலால், முகாமிற்கு வரும் குழந்தைகள்  ஆவணங்களுடன் பெற்றோர்,காப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். கலந்துகொள்பவர்களுக்கு உரிய போக்குவரத்து பயணப்படி, சிற்றுண்டி, நண்பகல் உணவும் வழங்கப்படவுள்ளது. எனவே 0-18 வயது முடிய உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகுழந்தைகளையும் தவறாது கலந்துகொண்டு இந்தஅரியவாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என வட்டார வளமைய மேற்பார்வையாளர்  செல்வக்குமார் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா