×

புதுகை கலெக்டர் வேண்டுகோள் பொன்னமராவதி அம்பலகாரன்பட்டி நவநாகேஸ்வரி அம்மன் கோயிலில் விளக்குபூஜை ஆடிப்பூரத்தை முன்னிட்டு அலர்மேல் மங்கை தாயாருக்கு சிறப்பு வளையல் அலங்காரம்

இலுப்பூர், ஆக.14:  இலுப்பூரில் உள்ள அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் மற்றும் இலுப்பூர் சவுராஷ்ட்ரா தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் ஆடி புரம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள்கோயில் அலர் மேல் மங்கை தாயார். சிறப்பு வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இலுப்பூரில் இப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. இப்கோயிலில் ஆடி பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு வளையல் அலங்காரத்தில்  அலர் மேல் மங்கை தாயார். பக்தர்களுக்கு அருள் புரிந்தார். திரளாள பக்தர்கள் இந்த வழிபாடு நிகழச்சியில் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இதே போல்  இலுப்பூர் சவுராஷ்ட்ரா தெருவில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் ஆடிபூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது. வழிபாட்டையொட்டி கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ராமஜெயம் வார வழிபாட்டு சபையினர் மற்றும் ஆண்டாள் குழுவினர் திருப்பள்ளி எழுச்சி,திருப்பாவை ஆகிய பாசுரங்களை பாடி வழிபாடு நடத்தினர். இந்த திருவாடிப்பூரம் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்நு கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராமஜெயம் வாரவழிபாட்டு குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு