×

புதுகை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல் காவிரியில் செல்பி எடுப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்

புதுக்கோட்டை, ஆக. 14: காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று புதுகை கலெக்டர் கணேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் கல்லனையில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் காவிரியில் நீர் பாய்ந்து வரும் கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களில் பொதுமக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிகளவில் நீர்வர வாய்ப்பு உள்ளதால், மேற்கண்ட பகுதிகளுக்கு குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது கால்நடைகளை நீர்நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். ஆறு, கால்வாய்களில் கடந்து செல்லும் பாதைகள் ஏதுமிருப்பின் அவற்றை அடையாளம் கண்டு உரிய எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...