×

எம்எல்ஏ ரகுபதி, செல்லப்பாண்டியன் கூட்டறிக்கை நார்த்தாமலை அம்மாச்சத்திரம் புனித ஆரோக்கிய மலை மாதா ஆலய தேர்பவனி கோலாகலம்

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் புனித ஆரோக்கிய மலைமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி தேர்பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 35ம் ஆண்டாக புனித ஆரோக்கிய மலைமாதா ஆலய தேர்பவனி கடந்த 3ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கீரனூர் மறைவட்ட அதிபர் அருளானந்தம் தலைமையில் கோயிலில் இருந்து திருக்கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து கொடிக்கம்பத்தில் ஏற்றி திருவிழா தொடங்கியது.
இதில் அம்மாசத்திரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 5ம் தேதி காலை திருப்பலி நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி திருவிழா திருப்பலியும், மாலை சிறப்பு நற்செய்தி கூட்டமும், பின்னர் தேர் திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய மலைமாதா எழுந்தருள தேர்பவனி நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. தொடர்ந்து கொடியிறக்கத்துடன் புனித ஆரோக்கிய மலைமாதா ஆலய திருவிழா நிறைவு பெற்றது.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு