×

புதுகையில் மாதாந்திர விளையாட்டு போட்டி

புதுக்கோட்டை, ஆக. 14: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2018- 19ம் ஆண்டுக்கான ஆகஸ்ட் மாத மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் வருகிற 30ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் தடகளம், பளுதூக்குதல், ஹாக்கி மற்றும் நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு நடைபெற உள்ளது. தடகள விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்,

குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் ஆகிய போட்டிகளும், பளுதூக்குதல் மற்றும் ஹாக்கி குழு விளையாட்டு போட்டிகள், நீச்சல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள் வருகிற 30ம் தேதி காலை 8 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி வாஞ்சிநாதனிடம் தங்களது பெயரினை பதிவு செய்யலாம்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா