×

பொன்பரப்பி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

செந்துறை, ஆக. 14 : பொன்பரப்பியில் உள்ள மாகசக்தி மாரியம்மன் கோயில் தேர் திருவிழா, 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. செந்துறை அருகே உள்ள  பொன்பரப்பியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் விழா நடத்துவது தொடர்பாக பொன்பரப்பி, பொன்குடிக்காடு கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது. மேலும் சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் சிலைகளை நீதிமன்றம் கைப்பற்றியது. இதையடுத்து 40து ஆண்டுகளாக வழக்குகள் நடந்தது. இதையடுத்து கடந்தாண்டு மாரியம்மன் சிலையை பொன்பரப்பி மக்களிடமும், சாமுண்டீஸ்வரி சிலையை பொன்குடிக்காடு மக்களிடமும் நீதிமன்றம் ஒப்படைத்தது.

இதைதொடர்ந்து மாரியம்மன் சிலையை கொண்டு வந்த பிறகு திருவிழா நடைபெற வேண்டி பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.5 லட்சத்தில் புதிதாக தேர் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று பொன்பரப்பி மாரியம்மன் கோயிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர். விழாவில் பொன்பரப்பி, சிறுகளத்தூர், பொன்குடிக்காடு, மருவத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...