×

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், ஆக. 14:  சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டுமென அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஜெயங்கொண்டத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். பொருளாளர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். ராஜமாணிக்கம், துணைத்தலைவர் தியாகராஜன், மாரிமுத்து. தங்கவேல் ஆகியோர் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் முக்கியத்துவம் குறித்து பேசினர். கூட்டத்தில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் சொத்து வரியை பலமடங்கு உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும். ஜெயங்கொண்டத்தில் விருத்தாசலம் சாலையில் மீன் மார்க்கெட் பின்புறம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன கழிப்பறை அமைக்க வேண்டும். சீனிவாசாநகர் அதன் விஸ்தரிப்பு பகுதிகளில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும்.

ஜெயங்கொண்டத்தில் இருந்து அதிகாலையில் தினசரி சென்னைக்கு பேருந்து இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் குஞ்சிதபாதம், கார்த்திகேயன், தனவேல், தங்கவேல் பங்கேற்றனர். முன்னதாக பாரிவள்ளல் வரவேற்றார். முகமதுசுல்தான் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி...