×

இருளர் வன உரிமைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும்

அரியலூர், ஆக. 14:  இருளர் வன உரிமைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமென அரியலூரில் நடந்த குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான மக்கள் பங்கேற்று கோரிக்கை மனு அளித்தனர். குவாகம் இருளர் வன உரிமை குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் குவாகம் பகுதியில் 70 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களது ஊரில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் கொங்கனர் வனத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தேன் எடுத்தல், கிழங்கு தோண்டுதல், எலி பிடித்தல், விறகு எடுத்தல், ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறோம். இதுதான் எங்களது வாழ்வாதாரம். எங்களது பொருளாதார மேம்பாடு மற்றும் ஊர் மக்களுக்கு அடிப்படை கிடைக்க கடந்தாண்டு குவாகம் இருளர் வன உரிமைக்குழு  துவங்கி எங்களது மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறோம். எனவே எங்களது குழுவுக்கு அங்கீகாரம் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியரசு தின கிராமசபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுமாறு மனு அளித்தோம்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வரும் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின கிராமசபை கூட்டத்தில் எங்களது குழுவுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 91 மனுக்கள் குவிந்ததுஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. டிஆர்ஓ தனசேகரன் தலைமை வகித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு  வீடுகள், திருமண நிதியுதவி
திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 91  மனுக்கள் வரப்பெற்றது. இந்த மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு டிஆர்ஓ தனசேகரன் உத்தரவிட்டார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது