×

அடிப்படை வசதி கேட்டு பெரம்பலூரில் பானை உடைக்கும் போராட்டத்திற்கு அனுமதி வேண்டும்

பெரம்பலூர்,ஆக.14: அடிப்படை வசதி கேட்டு பெரம்பலூரில் பானை உடைக்கும் போராட்டத்திற்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என எந்த கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், கண்டித்து தேசிய நெடுஞ்சாலையில் பானை உடைக்கும் போராட்டம் நடத்துவோம் என்று மங்களம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களம் கிராம பொதுமக்கள் அண்ணாமலை என்பவரது தலைமையில் அளித்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:மங்களம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் குடிநீர் பிரச்னை, புதிய ரேஷன்கடை, மயானப்பாதை, எஸ்சி, பிசி மக்களுக்கு உதவும் வகையில் அமரர் ஊர்தி, தனி குடும்ப அட்டை, எரியாத தெருவிக்குகளை சரிசெய்ய வேண்டும். மெட்டல் சாலை, சிமென்டு சாலை அமைத்து தர வேண்டும், சின்டெக்ஸ் டேங்குகள் அமைத்துத் தரவேண்டும். கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என சம்மந்தப்பட்ட வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சித்துறை அலுவலர், வேப்பந்தட்டை தாசில்தார், பெரம்பலூர் கலெக்டர் அலுவலம் என பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 30ம்தேதி காலை 9 மணிக்கு திருச்சி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் பொதுமக்கள் தலைமையில், பானை உடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED 1ம் வகுப்பு முதல் 9ம்வகுப்பு...