×

வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மைதானம் முழுவதும் சோதனை நடத்த உள்ளனர். பெரம்பலூர் கிளை சிறை சட்ட உதவி மையத்திற்கு உபகரணங்கள்

பெரம்பலூர்,ஆக.14: பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக கிளை சிறையில் இயங்கும் சட்டஉதவி மையத்திற்கு உபகரணங்களை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் வழங்கினார்.  தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மூலம் பெரம்பலூர் கிளைச்சிறையில் இயங்கும் சட்டஉதவி மையத்திற்கு கம்ப்யூட்டர், மேசை, நாற்காலி மற்றும் சட்டப்புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பாலராஜ மாணிக்கம் கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். விழாவில், மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி விஜயகாந்த், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முரளிதரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் வள்ளுவன் நம்பி, செயலாளர் சுந்தரராஜன், அட்வகேட் அசோஷியேசன் சங்கத்தலைவர் முகமது இலியாஸ், முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பால்ராஜ், வழக்கறிஞர் சிவானந்தம், கிளைச்சிறை கண்காணிப்பாளர் (பொ) மஸ்கர், உதவி கண்காணிப்பாளர் ராமர், சக்திவேல், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, சமூக சட்ட ஆர்வலர்கள் பாலமுருகன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேசுகையில், இந்த உபகரணங்களை சிறைவாசிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது குறைகளை உடனுக்குடன் சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கும், சிறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சிறைவாசிகள் சட்டப்புத்தகங்களை படித்து தங்கள் திறமைகளை வளர்த்து கொண்டால் குற்றங்கள் குறையும். சிறை வாசிகளின் நலனுக்காகவே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல்பட்டு வருகிறது. அதனை நல்ல முறையில் சிறைவாசிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது