×

பூதலூரில் மாற்றுதிறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருக்காட்டுப்பள்ளி, ஆக. 14: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின்கீழ் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நேற்று நடந்தது. முகாமை வட்டார கல்வி அலுவலர் அருண்மொழி ராஜகுமாரி துவக்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமிநாராயணன் வரவேற்றார். டாக்டர்கள் சித்ராதேவி, நவீன், மெஹபூப்பாட்சா, மோகன்ராஜ், சிவகுமார் ஆகியோர் பங்கேற்று மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர்.

இதில் 53 குழந்தைகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. 150 பழைய குழந்தைகளுக்கான அடையாள அட்டைகள் புதுப்பித்து தரப்பட்டது. முகாமை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சவுமியநாராயணன், சிரில் ஆண்டனி, குலோத்துங்கன் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள், கணக்காளர்கள் செய்தனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்