×

பொதுமக்கள் கடும் அவதி நெரூர் அக்னீஸ்வரர் கோயிலில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் சிவனை போற்றி நாதஸ்வர இசைநிகழ்ச்சி

கரூர், ஆக. 14:  கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள அக்னீஸ்வரர் கோயில் நடைபெற்ற நாத உற்சவ பெருவிழாவில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு நாதஸ்வரம் வாசித்தனர். கரூர் மாவட்டம் நெரூரில் சவுந்திர உடனுறை அக்னீஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா நடைபெற்று வருகிறது. 9ம் ஆண்டு நாத உற்சவ விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மங்கள இசை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 5மணி வரை பல்வேறு இசைக்குழுவினரின் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து, மாலை 5மணிக்கு மேல் நாதஸ்வரம் மற்றும் தவில் வித்வான்களின் இசை நிகழ்ச்சி துவங்கியது. இதில், இதில், 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு, ஒரு சேர அமர்ந்து, இறைவனை நோக்கி சிவபெருமானை போற்றி பாடல்களை இசைத்தனர். இந்நிகழ்ச்சியில், நெரூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அக்னீஸ்வரர் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...