×

குண்டும் குழியுமான நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா?

கீழ்வேளூர்,ஆக.14: குண்டும், குழியுமான நாகை, திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை-மைசூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைக்காமல் அவ்வப்போது பழுதடைந்த இடங்களில் பேச் ஒர்க் செய்து தற்காலிக பராமரிப்பு செய்யப்படுவதால் நாகை முதல் திருவாரூர் வரையிலான சாலையில் மஞ்சக்கொள்ளை, பெருள்வைத்தச்சேரி, சிக்கல், ஆழியூர், கீழ்வேளூர், சந்தியாத்தோப்பு,  நீலப்பாடி, அடியக்கமங்கலம், கிடாரங்கொண்டான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. பேச் ஒர்க் போடப்படும் இடங்களில் அதிக வாகனங்கள் செல்வதால் அந்த இடம் மீண்டும் பழுதாகி குண்டும் குழியுமாகி விடுகிறது. பல இடங்களில் சாலையில் உள்ள குழிகள் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே உள்ளது. இதனால் சாலையில் தற்போது நூற்றுக்கணக்கான குழிகள் ஏற்பட்டுள்ளது. வேளாங்கண்ணி, நாகூர் போன்ற முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அதிக சுற்றுலா பயணிகள் கார்,

வேன், பஸ் போன்ற வாகனங்களில் இந்த சாலையில் பயணிக்கும் போது அவர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நாகை முதல் திருவாரூர் வரை உள்ள 24 கிலோ மீட்டர்  சாலையில் இரண்டு வழிச்சாலை  சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு தான் பழைய சாலையில் வருகிறது. புதிதாக அமைக்கப்பட உள்ள இரண்டு வழிச்சாலை வயல் வழியாக புதிதாக அமைக்கப்பட உள்ளது. தற்போது  இடம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு சாலைக்கு அளவீடு பணிகள் மற்றும் குறிப்பிட்ட அளவு மண் நிறப்பும் பணி நடந்துள்ளதாகல் சாலை பணிகளை முடிக்க இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும். கடந்த மூன்று  வருடத்திற்கு மேல்  புதிய இரு வழி சாலையை காரணம் காட்டி  சாலை பராமரிப்பு பணி முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் எனவே நாகை-திருவாரூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக சீரமைத்திட மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞசாலை துறையும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொது மக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...