×

திருவாரூர் தியாகராஜர்சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா வளையல் அலங்காரத்தில் கமலாம்பாள் அருள் பாலித்தார்

திருவாரூர், ஆக.14: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று கமலாம்பாள் சுவாமிக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற  தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோயிலின் ஆடிப்பூர உற்சவ விழாவானது கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினந்தோறும் மாலையில் கமலாம்பாள் புறப்பாடு நடைபெற்று வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம்  8ம் நாள் நிகழ்ச்சியாக கமலாம்பாள்  ரதாரோகணத்தில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று ஆடிப்பூர தீர்த்தம் நிகழ்ச்சியும், வெள்ளை சாத்தல் மற்றும் பூரம் கழித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையொட்டி கமலாம்பாள்  வளையல் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு