×

தரகம்பட்டி குளத்துப் பகுதியில் டெக்ஸ்டைல் கழிவுகள் கொட்டுவோரை பிடித்து கொடுத்தும் நடவடிக்கை இல்லை

கடவூர், ஆக.14: தரகம்பட்டி குளத்துப் பகுதியில் ரப்பர் மற்றும் டெக்ஸ்டைல் கழிவுகள் கொட்டியவர்களை இப்பகுதி விவசாயிகள் பிடித்துக் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கடவூர் ஒன்றியத்தில் காட்டுப் பகுதியில் மற்றும் விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் தோல் கழிவு மூட்டைகள் கொட்டி வந்தனர். விவசாயிகள் கடும் எதிர்ப்பை அடுத்து கடந்த ஓராண்டாக இந்த பகுதியில் தோல் கழிவு மூட்டைகள் கொட்டப்படவில்லை. இந்த நிலையில் தரகம்பட்டியிலிருந்து வீரிசிங்கம்பட்டி சாலையில் உள்ள குளத்துப் பகுதியில் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் நேற்று முன்தினம் வேன் மூலமாக மூட்டை, மூட்டையாக ரப்பர் மற்றும் டெக்ஸ்டைல் கழிவுகள் கொட்ட முற்பட்டபோது அப்பகுதி விவசாயிகள் இந்த வேனை பிடித்து சிந்தாமணிபட்டி போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே கொட்டப்பட்டிருந்த கழிவு முட்டைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இதனால் இந்த பகுதியில் விவசாயம் பாதிப்படையும். எனவே விவசாயிகளின் நலன் கருதி இந்த கழிவு மூட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது