×

திருத்துறைப்பூண்டியில் தீவிபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தற்காலிக வீடு கட்டி தர வேண்டும்

திருத்துறைப்பூண்டி ஆக.14: திருத்துறைப்பூண்டியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தற்காலிக வீடு கட்டித்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் பெரியநாயகிபுரம் பகுதிகளில் கடந்த  மாதம் 16ம்தேதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 43 கூரைவீடுகளும் மற்றும்  17ம்தேதி மீனாட்சிவாய்க்கால் புதுத்தெருவில் 7 கூரைவீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.இதில் ரூ 1 கோடி மதிப்புடைய பணம், தங்கநகைகள், தானியங்கள், பாத்திரங்கள், உடைகள் முக்கியநிலபத்திரங்கள், குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், இருசக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவை எரிந்து விட்டது.அரசு ரூ.5000 நிவாரணம் மட்டுமே வழங்கியது. சேவை அமைப்புகள் பாத்திரங்கள், மளிகை பொருட்கள், உடைகள்வழங்கியது.
தீயினால் வீட்டு சுவர்கள் வெப்பத்தினால் இடிந்து விழுந்துவிட்டது. மீண்டும் வீடுகட்டி குடியேற குறைந்தது ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும்.

ஆனால் முழுமையான இழப்பை ஈடு செய்ய முடியாது. தார்பாய் மூலம் குடில் அமைத்து கொண்டு தற்போது வரை என்ன செய்வதென்று அறியாது தவித்து வருகின்றனர். இந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு தேவையான அவசர உதவிகளை செய்து தர வேண்டும்  இது குறித்து பாதிக்கப்பட்ட பாஸ்கர் என்பவர் கூறுகையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கட்டிட வேலை செய்வோர், விவசாய கூலி வேலை செய்பவர்கள் கடந்த 25 நாட்களாக வேலைக்கு செல்ல முடியவில்லை, எங்களுக்கு தற்காலிக வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றார். இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், தீ விபத்து நடந்தது முதல் நிவாரணபணிகளில் ஈடுபட்டு வருகிறோம். தனியார் நிறுவனங்கள் மூலம் தற்காலிக குடியிருப்பு மற்றும் நிரந்தரகான்கிரீட் வீடுகள் கட்ட வீடுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கலெக்டரிடம் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளோம்.இதற்கு கலெக்டர் உதவி செய்ய வேண்டும் என்றார்.

Tags :
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்