×

விரைந்து முடிக்க கோரிக்கை காவிரியில் கரைபுரண்டு ஓடியும் ஆயக்கட்டு நிலங்கள் வறண்டு கிடக்கின்றன தண்ணீர் கிடைக்க கலெக்டரிடம் மனு

கரூர், ஆக.14:  காவிரியில் கரைபுறண்டு ஓடியும் ஆயக்கட்டு நிலங்கள் வறண்டு கிடக்கிறன. எனவே தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் பாமக துணைபொது செயலாளர் பாஸ்கரன்அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: காவிரியில் ஒரு லட்சம் கனஅடிக்குமேல் நீர்வந்தும் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர்வரவில்லை. காரணம் காவிரியில் தொடர்ந்து மணல் அள்ளியதால் சுமார் 10மீ அளவுக்கு பள்ளமாகி விட்டது. வாங்கல், நெரூர் ராஜவாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு வாய்க்காலுக்கு நீர் கிடைக்க வழிசெய்யப்பட்டது. இந்த ஆண்டு தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மண் தடுப்பணையும் கட்டப்படவில்லை. நிரந்தர தடுப்பணை கட்டும் திட்டத்தையும் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் கரைபுரண்டு நீர் ஓடியும், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் நிலையிலும், கரையோரம் உள்ள ஆயக்கட்டு நிலங்கள் வறண்டு போய் கிடக்கின்றன. கலெக்டர் உடனே தலையிட்டு ஆடிப்பட்டத்திற்கு தண்ணீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு