×

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் அமைச்சர் காமராஜ் வடம் பிடித்து இழுத்தார்

மன்னார்குடி, ஆக. 14: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. தேரினை   அமைச்சர் காமராஜ் வடம் பிடித்து இழுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் ராஜகோபால சுவாமியும், செங்கமலத் தாயாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதன் ஒரு பகுதியாக ஆடிப்பூர 10ம் நாள்  விழாவையொட்டி நேற்று மாலை ராஜகோபால கோயில் வளாகத்திற்குள் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெற்றது. தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தனது மனைவியுடன் பங்கேற்று  மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுடன் சேர்ந்து தேரினை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று செங்கமலத் தாயாரை வணங்கி அருளை பெற்றனர்.

Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்