×

வியாபார நிறுவனங்கள் சுதந்திர தினத்தன்று விடுமுறை விட வேண்டும் தவறினால் நடவடிக்கை: தொழிலாளர் துறை அறிவிப்பு

திருச்சி, ஆக.14: சென்னை தொழிலாளர் ஆணையர் நந்தகோபால் ஆணையின்படியும்  திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் தர்மசீலன் ஆகியோரின் அறிவுரைகளின் படியும் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்ெவாரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய பண்டிகை விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது.  எனவே அன்றைய தினம் பணியாற்றும் அனைத்து விதமான ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டியது வேலை அளிப்பவர்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு அன்றைய தினம் கடைகள் நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டர் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களை வேலை அமர்த்த உத்தேசிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வேலை அளிப்பவர் அன்றைய தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அவர்களுக்கு எழுத்துபூர்வமாக  நோட்டீஸ் கொடுக்க  வேண்டும்.

அன்றைய தினம் பணியாற்றும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது சம்பளத்துடன் கூடிய பிரிதொரு நாள் மாற்று விடுப்பு கொடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஊழியர்களுக்கு  நோட்டீஸின் நகல் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர், தேசிய பண்டிகை விடுமுறை தினத்திற்கு 24 மணிக்கு நேரத்திற்கு முன்பாக அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை மீறினால், அன்றைய தினம் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளும் போது   நடைமுறைகளை பின்பற்றாத வேலை அளிப்பர்வகளின்  மீது தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் நடவழக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு