×

ஆக்கிரமிப்பால் மாயமான ஏரியை மீட்க கோரிக்கை

திருச்சி, ஆக.14:  மணப்பாறை அருகே மாயமான கருங்குளம் ஏரியை கண்டுபிடித்து குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டுமென என கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மணப்பாறை அருகே கருங்குளம், பழையகோட்டை கிராம மக்கள், விவசாயிகள் சேசுராஜ் என்பவர் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணப்பாறை அருகே கருங்குளம் பழையகோட்டை மற்றும் செக்கணம் பஞ்சாயத்துக்கு இடைபட்ட பகுதியில் கருங்குளம் ஏரி உள்ளது. ஆக்கிரமிப்பாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் ஏரி இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

இதை பராமரித்து வரும் பொதுப் பணித்துறையின் வையம்பட்டி அலுவலர்களுக்கு அதன் புல எண் கூட தெரியவில்லை. இந்த ஏரிக்கு பல லட்சம் ரூபாய் அரசு பணம் பலமுறை ஒதுக்கப்பட்டு வேலை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மாயமான ஏரியை கண்டறிந்து அளந்து எல்லைகளை வரையறுத்து பின்பு குடிமராமத்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்,

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு