கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்: 235 மனுக்கள் குவிந்தன

கரூர், ஆக.14:  கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 235 மனுக்கள் குவிந்தன. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு உதவித்தொகைகள், அடிப்படை வசதிகள் கோரி 235 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.  மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் டிஆர்ஓ சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், ஆதிதிராவிடர் நல அலுவலர் பாலசுப்பிரமணியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமரேசன் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

× RELATED குளத்துப்பாளையம் சாலையில்...