×

கலெக்டர் தகவல் குழாய்கள் பதித்து ஏரி, குளங்களுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்

கடவூர், ஆக.14:  கடவூர் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலமாக தண்ணீர் கொண்டுவர வேண்டும் என அனைத்து விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி ஆற்றிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குழாய் மூலமாக நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்திய அரசு ஏன் கடவூர் ஒன்றியத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை கொண்டுவர முடியாதா? இல்லையென்றால் நத்தம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் காவிரியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர்  வீணாக கடலில் கலக்கிறது.

இதனை தடுக்கும் விதமாக கடவூர் ஒன்றியத்தில் உள்ள மாவத்தூர், தரகம்பட்டி, பண்ணப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய ஏரிகளில் குழாய்கள் மூலமாக நீர் நிரப்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனை கொண்டு இப்பகுதியில் விவசாயம் செய்ய முடியும். இதற்காக கடவூர் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில் கடலில் கலக்கும் காவேரி ஆற்றில் உபரி நீரை இந்த பகுதியில் உள்ள நீர்நிலை குளங்கள், ஏரிகளில் குழாய்கள் மூலமாக கொண்டு வர ஆவணம் செய்ய வேண்டும்.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உபரி நீரை இந்த பகுதிக்கு கொண்டு வர தீர்மானம் கொண்டு வர வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற காலதாமதம் ஏற்பட்டால் பொது நல வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் தொடங்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்