×

மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 8 கூட்டுறவு சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

மண்ணச்சநல்லூர், ஆக.14: மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள 8 கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் பனமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக மண்ணச்சநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயக்குமார், திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பூனாம்பாளையம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன்,   துணைத்தலைவராக சோமசுந்தரம், இருங்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக சூசைமாணிக்கம், பெரகம்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக செல்வராஜ்,

மண்ணச்சநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக சமயபுரம் பேரூராட்சி அதிமுக செயலாளர்  சம்பத்குமார்,  மண்ணச்சநல்லூர் நகர கூட்டுறவு பண்டகசாலை தலைவராக பேரூராட்சி அதிமுக செயலாளர் துரைசக்திவேல், கரியமாணிக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கதலைவராக ரெங்கசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகள் திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ரத்தினவேல்,  மண்ணச்சநல்லூர் எம்ல்ஏ  பரமேஸ்வரி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு