குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை கிராம சபை கூட்டங்களில் ரேஷன்கடை பதிவேடுகள் தணிக்கை செய்யப்படும்

கரூர், ஆக.14:  கிராம சபைக்கூட்டங்களில் ரேஷன்கடை பதிவேடுகள் தணிக்கை செய்யப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.பொதுவிநியோகத் திட்ட செயல்பாட்டிலும், நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டிலும், தூய்மையான நடைமுறையை கொண்டுவரும் வகையில் நியாயவிலைக் கடைகளின் பதிவேடுகள் சமூக தணிக்கைக்கு உட்படுத்த அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இத்திட்டம் ஆகஸ்டு 15 அன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

அன்றைய தினம கிராம சபைக்கூட்டத்தில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் நியாயவிலை அங்காடிகளின் அனைத்து பதிவேடுகள், பயனாளிகள் பட்டியல், சமுதாய தணிக்கைக் குழுவின் தணிக்கைக்கு வைக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். எனவே பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு, பொதுவிநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

× RELATED டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி