×

பைக் விபத்தில் வாலிபர் காயம்3

தா.பேட்டை, ஆக.14: முசிறி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு, விவசாயி. இவரது மகன் வெங்கடேஷ் (26). இவர் தனது முசிறிக்கு பைக்கில் சென்றபோது ரோட்டின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் பலத்தகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் வெங்கடேஷ் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து முசிறி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியம்மனுக்கு பால்குட ஊர்வலம் திருச்சி முடுக்குப்பட்டி மாரியம்மன் கோயிலுக்கு ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக செல்கின்றனர்.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி