தளவாப்பாளையம் சாலையை தார்சாலையாக மாற்ற வேண்டும்

கரூர், ஆக. 14: கரூர் மாவட்டம் தளவாபாளையம் பைபாஸ் சாலை பகுதியில் இருந்து சேங்கல்மலைக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் தளவாபாளையம் பகுதியில் இருந்து சேங்கல்மலைக்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாகவே மோசமான நிலையில் இருந்தது. இதனை சீரமைத்து தார்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைத்திருந்தனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த சாலைய சீரமைக்கும் வகையில், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், தார்ச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். சேங்கல்மலைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முக்கிய விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையின் மோசமான தன்மையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது சாலைப்பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த பணியை தாமதப்படுத்தாமல் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

× RELATED டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி