×

சுதந்திர தினத்தை முன்னிட்டு 404 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

திருச்சி, ஆக.14: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் வருகிற 15ம்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கிராமசபை கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுதல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், தூய்மை கணக்கெடுப்பு ஊரகம், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், குழுக்களுக்கு ஒத்துழைப்பு, கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம்,

முதல்வரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், 2018-2019 பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - 1 பகுதி ஓஐ (2018-19), ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள், முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விபரங்கள், பொது விநியோகத் திட்டம், தீன்தயாள் உபாத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டம், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடைபெறுவதை தடுக்கவும், காணாமல் போன குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பதிவுபெறாத குழந்தைகள் பராமரிப்பு இல்லம் போன்ற விபரங்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தெரிவித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கிராமசபைக்கூட்டத்தில் வாக்காளர்களான அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஊராட்சிகளில் கிராம ராஜ்யம் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என திருச்சி கலெக்டர் ராஜாமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ