×

திருவிழாவுக்கு பஸ்கள் இயக்கம் ராஜபாளையம் பகுதியில் கிராமப்புற பொதுமக்கள் அவதி

ராஜபாளையம், ஆக. 14:  ராஜபாளையம் பகுதியில் கிராமப்புற பஸ்களை சதுரகிரிக்கு இயக்கியதால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்பட்டனர்.
ஆடி அமாவசையை முன்னிட்டு, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏராளமாக இயக்கப்பட்டன. இதில், ராஜபாளையம் பகுதியில் கிராமப்புறங்களுக்கு இயக்கிய பஸ்களை சிறப்பு பஸ்களாக சதுரகிரிக்கு இயக்கினர். இதனால், கிராமப்புற பொதுமக்கள் உரிய நேரத்துக்கு பஸ்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். வழக்கமான வேலைகளுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர்.  
குறிப்பாக ராஜபாளையத்தில் இருந்து நத்தம்பட்டி வழியாக திருவேங்கடம் செல்லும் பஸ்களையும், வலையபட்டிக்கு செல்லும் பஸ், முதுகுடி வழியாக வடகரை வரை செல்லும் பஸ்களை நிறுத்தியிருந்தனர். அனைத்து வழித்தடத்திலும் இயங்கி வந்த பஸ்களையும் அவ்வப்போது சிறப்பு பஸ் எனக் கூறி சதுரகிரிக்கு அனுப்பி வைத்தனர்.

சதுரகிரிக்கு செல்ல கூட்டம் இல்லையென்றால், பஸ்நிலையத்தில் இருக்கும் பஸ்களை வழக்கமான கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால், எப்போது பஸ்கள் வருகிறது என்பது தெரியாமல் கிராமப்புற மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் சதுரகிரிக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என உத்தரவிட்டதால்  இங்குள்ள பஸ்களை இயக்கினோம்’ என்றனர். எனவே, இனி வரும் காலங்களில் சிறப்பு பஸ்களை இயக்கும்போது, ஏற்கனவே வழித்தடங்களில் ஓடும் பஸ்களை நிறுத்தாமல் மதுரை, நெல்லை என வெளியூர் பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு