×

பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை

உடுமலை, ஆக.14:பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. உடுமலை  அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி  உள்ளது. இங்கு தினமும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர்.  அமாவாசை, பவுர்ணமி, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மேற்கு  தொடர்ச்சி மலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் பஞ்சலிங்க  அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி கடந்த மாதம்  9ம்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

2 வாரம் கழித்து  மழை குறைந்த நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை  காரணமாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று  அதிகாலை முதல் அதிகளவில் தண்ணீர் கொட்டியது.இதையடுத்து, பாதுகாப்பு கருதி  பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல நேற்று தடை  விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினர் மற்றும்  வனத்துறையினர் தண்ணீர் அளவை கண்காணித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு