×

தென்னை மரம் மின்வயரில் விழுந்து தீ

போடி, ஆக. 14: திடீர் என சூறாவளி வீசியதால் தென்னை மரம் சாய்ந்து மின்வயரில் பட்டு தீப்பிடித்து எறிந்ததால் ஒரு மணி நேரமாக பரபரப்பு ஏற்பட்டது. போடி மூணாறு சாலையில் அரசு மருத்துவமனையும், வேளாண்மை துறை அலுவலகமும் உள்ளது. இதையடுத்து கோட்டைச் சுவருக்குள் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன. நேற்று மாலை திடீரென வீசிய காற்றால் கோட்டை சுவருக்குள் பட்டு போன நிலையில் இருந்த தென்னை மரம் ஒடிந்து அருகில் கடக்கின்ற உயரழுத்த மின் வயரில் விழுந்தது.

இதனால் அந்த மரம் மளமள வென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் மின்சாரத்தை துண்டித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை  விரைவாக அணைத்ததால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடியாக தீ பரவாமல் தடுப்பட்டதால் அரசு மருத்துவமனை, நகராட்சி, குடியிருப்புகள் உள்பட பல பகுதிகளில் ஏற்பட இருந்த பேரிழப்பு தவிர்க்கப்பட்டது. தீ விபத்தால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...