×

கண்டமனூரில் பராமரிப்பு இல்லாத வனச்சரக அலுவலக சாலை

வருசநாடு, ஆக.14: கடமலை - மயிலை ஒன்றியம் கண்டமனூர் கிராமத்தில் வனச்சரக அலுவலகம் உள்ளது. தேனி பிரதான சாலையில் இருந்து கண்டமனூர் வனச்சரகம் வரை இச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரக அலுவலகத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே கண்டமனூர் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே பாலம் அமைக்கப்படாமல் தார்சாலை அமைக்கப்பட்டது. இதனால் மழை பெய்து ஓடையில் நீர்வரத்து உள்ள நேரங்களில் சாலையின் மேல் நீர் சென்றது. அதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை சேதமடைய தொடங்கியது. எனவே, வனச்சரக அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, ஓடையில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் சாலை சிறிது சிறிதாக சேதமடைய தொடங்கியது. தற்போது இந்த சாலையின் குறிப்பிட்ட அளவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. வனச்சரக அலுவலகத்திற்கு எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வனத்துறை வாகனங்கள் கூட மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வனச்சரக அலுவலகத்தை சுற்றிலும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவது வழக்கம். ஆனால் தற்போது சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே, விவசாயிகள் மாற்றுப்பாதை வழியாக தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கண்டமனூர் வனச்சரக அலுவலகத்திற்கு அமைந்துள்ள சாலையில் ஓடையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...